முல்லைத்தீவு பகுதியில் வாள் வெட்டு! ஒருவர் படுகாயம்
பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் நடாத்திய வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அதே இடத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா யாதவராசா (43) என்பவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைக்களை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed